தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'முகிலன், ரஜினியிடம் விசாரணை நடத்த வலியுறுத்துவோம்..!' - வாஞ்சிநாதன் - விசாரணை

தூத்துக்குடி: "ஸ்டெர்லைட் கலவரம் தொடர்பாக கருத்துக் கூறிய நடிகர் ரஜினிகாந்திடம் விசாரணை நடத்த வலியுறுத்துவோம்" என்று ஒருநபர் கமிஷன் விசாரணைக்கு ஆஜரான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கூறியுள்ளார்.

vanjinathan

By

Published : Jul 17, 2019, 5:45 PM IST

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரம் குறித்து விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டது.

இந்த விசாரணையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன், ஹரிராகவன், குமரெட்டியாபுரம் மகேஷ் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பபட்டிருந்து. அதன் அடிப்படையில் ஒருநபர் விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி விளக்கம் அளிப்பதற்காக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

அப்போது வாஞ்சிநாதன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது நடத்தப்பட்ட கலவரம் திட்டமிட்டப்பட்ட ஒன்று. இதில் காவல்துறையினர் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை வரம்புமீறி செயல்பட்டுள்ளது. இதுதொடர்பாக எங்களிடமுள்ள ஆதாரங்களையும், எங்கள் மீது வன்முறையை தூண்டுவதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளையும், வழக்குகள் அனைத்தும் பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் விளக்கமளித்துள்ளோம்" என்றார்.

ரஜினிகாந்திடம் விசாரணை நடத்த வலியுறுத்துவோம்

மேலும் பேசிய அவர், "ஸ்டெர்லைட் கலவரத்தில் பயங்கரவாதிகள் புகுந்ததால்தான் வன்முறை அரங்கேறியது என்று சொன்ன நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பலரையும் விசாரணைக்கு அழைத்து விளக்கம் கேட்க வேண்டும் என்று வலியுறுத்த உள்ளோம்.
ஸ்டெர்லைட் கலவரம் தொடர்பாக முகிலன் வெளியிட்ட வீடியோ ஆதாரத்தை எடுத்துக்கொண்டு அவரையும் விசாரணைக்கு அழைக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கவுள்ளோம்" என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details