தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இலுப்பையூரணி கிராமத்தைச் சேர்ந்த அன்னபூரணம் என்பவர், 2009ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். அவரது இறப்பு சான்றிதழ் கேட்டு அவரது மகள் மரகதம், கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்துள்ளார். இருப்பினும், தாலுகா அலுவலக ஊழியர்கள் அவருக்கு சரியான விவரம் தரவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மரகதம் பத்திரப்பதிவு அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு அலைக்கழிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ச்சியாக, அலைந்த மரகதத்தின் குடும்பத்தினருக்கு, ஆவணங்கள் தொலைந்து விட்டதாக அதிர்ச்சி அளித்துள்ளனர், தாலுகா அலுவலர்கள். இதுகுறித்து, மரகதத்தின் மகன் ராஜா, ”என்னுடைய பாட்டி இறந்த ஆண்டு 2009. சில காரணங்களுக்காக அவரது இறப்பு சான்றிதழ் தேவைப்படுகிறது. இதற்காக, கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்தோம். அவர் தாலுகா அலுவலகத்திற்கு செல்லுமாறு பரிந்துரைத்தார்.