அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெற்றுவருகிறது. ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக சண்முகையா களமிறங்கிஇருக்கிறார். அவர் மக்களோடு மக்களாக நின்று ஐரவன்பட்டி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.
50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வேன்: திமுக வேட்பாளர் சண்முகையா - thoothukudi
தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என திமுக வேட்பாளர் சண்முகையா கூறியுள்ளார்.
சண்முகையா
அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கனிமொழி இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என உறுதிபட தெரிவித்தார்.