தூத்துக்குடி தாளமுத்துநகரை அடுத்துள்ள வண்ணார்பேட்டை பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முருகன். இவருடைய மகன் சூரியபிரகாஷ் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு கிளீனராக வேலைக்குச் சென்று வந்தார்.
இந்நிலையில், வழக்கம் போல் சூரிய பிரகாஷ் இன்று (ஜூலை 31) காலையில் வேலைக்குச் சென்றுவிட்டு மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டு எதிரே உள்ள கழிவுநீர் தொட்டி மீது நின்று கை கால்களை கழுவிக் கொண்டிருந்தார். அச்சமயத்தில் எதிர்பாராதவிதமாக கழிவுநீர் தொட்டியில் கான்கிரீட் கூரை இடிந்து விழுந்தது.
கழிவுநீர் தொட்டி மேற்கூரை இடிந்துவிழுந்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு - இளைஞர் பலி
தூத்துக்குடி: தாளமுத்து நகரில் கழிவுநீர் தொட்டியின் மேற்கூரை இடிந்துவிழுந்த விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில் நிலைகுலைந்த சூரியபிரகாஷ் கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து மூழ்கினார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கே சூரியபிரகாஷைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து தாளமுத்து நகர் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.