தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எழுவர் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுப்பார் - அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ

தூத்துக்குடி: பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை தொடர்பாக நீதிமன்றம் கூறிய படி ஆளுநர் தான் முடிவு எடுப்பார் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

ஏழு பேர் விடுதலை ஆளுநர் முடிவெடுப்பார் - அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ
ஏழு பேர் விடுதலை ஆளுநர் முடிவெடுப்பார் - அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ

By

Published : Feb 9, 2020, 10:31 AM IST

Updated : Feb 9, 2020, 11:43 AM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு தனியார் வேலைவாய்ப்பு முகாமை தொடங்கிவைத்து பேசினார்.

ஏழ்வர் விடுதலை ஆளுநர் முடிவெடுப்பார் - அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை தொடர்பாக நீதிமன்றம் கூறியது பற்றி முழுமையாக தெரியவில்லை. இருப்பினும் நீதிமன்றம் கூறிய படி ஆளுநர் தான் முடிவு எடுப்பார்” என்றார்.

இதையும் படிங்க...தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை - தமிழ்நாடு சுகாதாரத் துறை அறிவிப்பு!

Last Updated : Feb 9, 2020, 11:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details