இலங்கையில் குதிரமலை கடற்கரையில் அந்நாட்டு கடற்படையினர் மேற்கொண்ட ரோந்துப் பணியின்போது சர்வதேச கடல் எல்லையை (IMBL) மீறி இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்த இரண்டு சந்தேகத்திற்குரிய இந்திய படகுகளை சோதனை செய்ததில் படகிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கடத்தி கொண்டுவந்த சுமார் 425 கிலோகிராம் ஏலக்காய், பிற உணவு, நுகர்பொருள்களுடன் ஏழு இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
மேலும், மற்றொரு படகிலிருந்து 2,790 கிலோகிராம் மஞ்சள் மற்றும் 93 பைகளில் பொதிசெய்யப்பட்ட 378 கிலோகிராம் ஏலக்காயுடன் ஐந்து இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
கரோனா பரவலைத் தடுப்பதற்காக வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள், நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் ஏலக்காய், மஞ்சள், பிற நுகர்பொருள்கள் ஆகியவற்றை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டதில் ஐந்து பேர் தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த சேகுதலி (23), கோபுரத்தான் (51), ஸ்டாலின் (45), சார்லஸ் உள்பட ஐந்து பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, கைதுசெய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களும் படகுகளுடன் மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.