தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த மஞ்சள் பறிமுதல்! - இலங்கைக்கு கடத்த முயன்ற மஞ்சள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள மஞ்சளை கியூ பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

turmeric
turmeric

By

Published : Jul 1, 2021, 8:11 AM IST

தூத்துக்குடி: தருவைகுளம் அருகே உள்ள பட்டினமருதூர் கடற்கரையில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படுவதாக கியூ பிரிவுனருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலையடுத்து கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கடற்கரையில் நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டதில் 85 மூட்டைகளில் மொத்தம் 2.5 டன் மஞ்சள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் 10 லட்சம் ஆகும். இதனை சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்கு அடையாள நபர்கள் கடத்த இருந்ததும் தெரியவந்தது.

காவல் துறையினரைக் கண்டதும் கடத்தல் கும்பல் கடலில் இருந்த படகு ஒன்றின் மூலம் தப்பிச் சென்றனர். இதனையடுத்து மஞ்சள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம், படகு, ஐந்து இரு சக்கர வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: இலங்கைக்கு கடத்த முயன்ற 2.5 டன் மஞ்சள் பறிமுதல்: 5 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details