தூத்துகுடி மாவட்டம் நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அகப்பைகுளத்தில் புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலையடுத்து ஆய்வாளர் விஜயலட்சுமி தலைமையிலான காவலர்கள் அகப்பைகுளம் பகுதியைச் சேர்ந்த பேபி அலிஸ்புளோரா என்பவருக்கு சொந்தமான வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் - வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல்
தூத்துக்குடி: நாசரேத் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.10.50 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
tobacco
பின் தொடர் விசாரணை மேற்கொள்கையில், நாசரேத் மோசஸ் தெருவைச் சேர்ந்த ஜெயசீலன், திசையன்விளையை சேர்ந்த கொம்பையா ஆகியோர் அந்த வீட்டில் 37 மூட்டைகளில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து நாசரேத் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்து அங்கு இருந்த ரூ. 10 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 520 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.