தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுமோவில் கடத்தி வந்த மூட்டை ரேசன் அரிசி பறிமுதல்: ஓட்டுநர் கைது - சுமோவில் கடத்தி வந்த மூட்டை ரேசன் அரிசி பறிமுதல்

தூத்துகுடி: விளாத்திகுளம் அருகே சுமோவில் கடத்தி வந்த 35 மூட்டைகள் ரேசன் அரிசியை விளாத்திகுளம் வட்ட வழங்கல் அலுவலர்கள் பறிமுதல் செய்து ஓட்டுநரை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

rice
rice

By

Published : Jun 24, 2021, 11:35 PM IST

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் ரேஷன் அரிசி கடத்துவதாக விளாத்திகுளம் வட்ட வழங்கல் அலுவலர் பாலமுருகனுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து விளாத்திகுளம் வட்ட வழங்கல் அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த டாட்டா சுமோ வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் சுமார் 35 மூட்டை ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர் தூத்துக்குடி கோமஸ்புரத்தை சேர்ந்த உதயக்குமார் என்பது தெரியவந்தது. மேலும் புதியம்புத்தூரைச் சேர்ந்த போஸ், வசந்த் ஆகியோர் வீடு வீடாக சேகரித்த ரேஷன் அரிசியை, தூத்துக்குடியை சேர்ந்த ஐசக் என்பவருக்கு சொந்தமான கோழி பண்ணைக்கு கொண்டு செல்வதாக கூறியுள்ளார்.

அதன் பின் உதயகுமார், 35 மூட்டைகளில் இருந்த 1,750 கிலோ அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சுமோ ஆகியவற்றை விளாத்திகுளம் வட்ட வழங்கல் அலுவலர்கள் குளத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: ரயிலில் கடத்தி வரப்பட்ட 1 டன் ரேஷன் அரிசி மீட்பு!

ABOUT THE AUTHOR

...view details