தூத்துக்குடியில் 2018ஆம் ஆண்டு மே மாதம் 22, 23 ஆகிய தேதிகளில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. அப்போது நடந்த காவல் துறையினரின் துப்பாக்கிச் சூடு, தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தின் 14ஆவது கட்ட விசாரணை கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி நிறைவுபெற்றது.
இதைத் தொடர்ந்து 15ஆம் கட்ட விசாரணை நாளை 16ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது. இதில் 20 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள விசாரணை ஆணைய அலுவலகத்தில் நாளை 16ஆம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.