தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்செந்தூர் கடலில் இரண்டாவது நாளாக குளிக்க  தடை - தூத்துக்குடி

தூத்துக்குடி: திருச்செந்தூர் கடலில் பலத்த காற்று வீசுவதால் இரண்டாவது நாளாக குளிக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் கடலில் இரண்டாவது நாளாக  பக்தர்கள் குளிக்க  தடை...

By

Published : Aug 22, 2019, 10:57 PM IST

21ஆம் தேதி அதிகாலையிலிருந்து, 23ஆம் தேதி நள்ளிரவு வரை, குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான கடலோர பகுதியில் மணிக்கு, 45 முதல் 55 கி.மீ., வரை பலத்த காற்று வீசக்கூடும் என்றும், இதனால் கடல் அலை 2.8 மீட்டரிலிருந்து 3.4 மீட்டர் உயரம் வரை எழக்கூடும் எனவே மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் நேற்று முன் தினம் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

திருச்செந்தூர் கடலில் இரண்டாவது நாளாக பக்தர்கள் குளிக்க தடை...

இதனைத் தெடர்ந்து தூத்துக்குடி மீன்வளத் துறை இணை இயக்குனர் பாலசரஸ்வதி தெரிவித்த தகவலின்படி, திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இந்த தடை 2ஆவது நாளாக இன்றும் தொடர்ந்தது. காலையில் அலையின் சீற்றம் குறைவாக இருந்ததால் பக்தர்கள் தடையை மீறி குளித்தாலும், பின் போலீசார் பக்தர்கள் குளிக்க தடை விதித்தனர். மீன்வளத் துறையின் எச்சரிக்கையினால் நாட்டு படகு , பைபர் படகு மீனவர்கள் நேற்று மீன் பிடிக்கச் செல்லவில்லை.

ABOUT THE AUTHOR

...view details