தூத்துக்குடி டி.ஆர்.நாயுடு தெருவில் 'இந்தியன் ஆபிசர்ஸ் கிளப்' எனும் பெயரில் மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தூத்துக்குடி உள்பட தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கும் நிலையில் இந்த மனமகிழ் மன்றத்தில் சட்டவிரோதமாக சூதாட்டம் நடைபெறுவதாக தாசில்தார் செல்வகுமாருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன் அடிப்படையில் தாசில்தார் செல்வக்குமார் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் காமராஜ் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார். அப்போது, 144 தடை உத்தரவை மீறி மனமகிழ் மன்றம் நடத்தி வந்ததும், சூதாட்டத்தில் ஈடுபட்டதும் உறுதிப்படுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மனமகிழ் மன்றத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி வி.இ. ரோட்டை சேர்ந்த அந்தோணி ராஜ் (48), தெற்கு புதுதெருவை சேர்ந்த இளங்கோவன் (55), வடக்கு காட்டன் ரோட்டை சேர்ந்த ரவிச்சந்திரன் (51), ரயில்வே காலனியை சேர்ந்த மகாராஜன் (34), முலக்கரைப்பட்டியை சேர்ந்த கருப்பசாமி (67) ஆகிய ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் தடை உத்தரவை மீறி செயல்பட்ட மனமகிழ் மன்றத்தை தாசில்தார் செல்வக்குமார் தலைமையிலான அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
மனமகிழ் மன்றத்திற்கு சீல் இதையும் படிங்க:ஹாயாக ஊர் சுற்றிய இளைஞர்கள் - கடும் வெயிலில் செருப்பில்லாமல் நிற்க வைத்த போலீீசார்