தூத்துக்குடியிலிருந்து கடல் வழியாக அரியவகை கடல் அட்டைகளைக் கடத்திய நான்கு பேர் இலங்கை கடற்கரையில் இறங்கும்போது, மறைந்திருந்த இலங்கை - கல்பிட்டி நகரைச் சேர்ந்த காவல் துறையினர் கடத்தல்காரர்களை சுற்றி வளைத்து, கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்த 763 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் நான்கு பேரையும் கல்பிட்டி காவல் நிலையத்தில் வைத்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.