தூத்துக்குடி மாவட்டம், எப்போதும் வென்றான் அருகேயுள்ள காட்டு நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு உதயகுமார் என்ற இரண்டரை வயது மகன் உள்ளார். குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே அறையில் நேற்றிரவு தூங்கியுள்ளனர். அதிகாலை ஐந்து மணியளவில் ஆண் குழந்தை உதயகுமார் திடீரென கதறி அழுததால் பெற்றோர் விழித்துப் பார்த்தபோது குழந்தையின் காலில் தேள் கொட்டியிருப்பது தெரியவந்தது.
தேள் கொட்டி சிறுவன் சாவு - பெற்றோர் வேதனை - சிறுவன் சாவு
தூத்துக்குடி: எப்போதும் வென்றான் அருகே தேள் கொட்டியதில் இரண்டரை வயது ஆண் குழந்தை பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவன் சாவு
இதையடுத்து குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து எப்போதும் வென்றான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Last Updated : Jul 7, 2019, 8:30 PM IST