தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் மாணவ,மாணவிகள் கலந்துகொண்ட மினி மாரத்தான் போட்டி! - தூத்துக்குடியில் காமராஜ் கல்லூரி

தூத்துக்குடி: 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட மினி மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

மினி மாரத்தான் போட்டி தூத்துக்குடி

By

Published : Oct 12, 2019, 7:24 PM IST

தூத்துக்குடியில் காமராஜ் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்தின் 37ஆவது ஆண்டு விழா மற்றும் காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியை, தூத்துக்குடி துறைமுக சாலையில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கல்லூரி முதல்வர் நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஆண்களுக்கான போட்டி தூத்துக்குடி பீச் ரோட்டில் இருந்தும், பெண்களுக்கான போட்டி ரோச் பூங்காவில் இருந்தும் தொடங்கி, காமராஜ் கல்லூரி வரை நடந்தது.

Mini Marathon at Thoothukudi

ஆண்கள், பெண்கள் பிரிவில் முதலிடம் வென்றவர்களுக்கு இரண்டு கிராம் தங்க நாணயமும், இரண்டாம் இடத்தை வென்றவர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயமும், மூன்றாம் இடம் வென்றவர்களுக்கு அரை கிராம் தங்க நாணயமும் பரிசுகளாக வழங்கப்பட்டன. அத்துடன் மினி மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க:

சீன அதிபரின் அழைப்பை ஏற்ற மோடி!

ABOUT THE AUTHOR

...view details