தூத்துக்குடி, சாத்தான்குளம் காவல் துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் பிறைச்சந்திரன் தலையில், சிபிசிஐடி காவல் துறையினர் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் செல்போன் கடை அருகில் உள்ள கடைகாரர்களிடம் விசாரணையை தொடங்கினர்.
சாத்தான்குளம் சம்பவம்: விசாரணையை தொடக்கிய சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர்! - The Sathankulam incident
தூத்துக்குடி: காவல் துறையினரின் தாக்குதலில் உயிரிழந்த தந்தை, மகனின் வழக்கு குறித்து சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் அனில்குமார் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தான்குளம் சம்பவம்
அதனைத்தொடர்ந்து ஜெயராஜின் வீடு, கடை மற்றும் அருகே உள்ள பொதுமக்கள், காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும், துணை காவல் கண்காணிப்பாளர் அனில் குமார் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:குற்றப் பின்னணி கொண்ட தூத்துக்குடி காவல் ஆய்வாளர்: அம்பலமான பகீர் தகவல்!