தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இவ்வழக்கு தொடர்பாக ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், காவலர்கள் முருகன், முத்துராஜ், பால் துரை, சாமதுரை, செல்லதுரை, தாமஸ், பிரான்சிஸ், வெயிலு முத்து உள்ளிட்ட பத்து பேர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மற்றும் காவலர் முருகன், முத்துராஜ் ஆகிய 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதனையடுத்து மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதியளித்தது. இதனையடுத்து சிபிஐ அலுவலகத்தில் ஐந்து பேரிடமும் விசாரணை நடத்தியது.