சாத்தான்குளம் வழக்கில் எஸ்.ஐ கைது - சாத்தான்குளம் கொலை வழக்காக பதிவு
21:06 July 01
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் மரண விவகாரத்தில் தொடர்புடைய காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கைது செய்யப்பட்டார்.
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில், காவலில் உயிரிழப்பு என்று பதிவு செய்யப்பட்டிருந்த பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்காக பதிவு சிபிசிஐடி செய்துள்ளது. உதவி ஆய்வாளர்கள் இருவர் உள்பட ஆறு பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி காவல் துறையினர், இதில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, மற்றொரு உதவி ஆய்வாளரான பாலகிருஷ்ணனை ஆத்தூரில் இருப்பதாக சிபிசிஐடிக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் அவரையும் கைது செய்ய சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.
உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் செல்லத்துரை, முத்துராஜ், முருகன், மகாராஜன் உள்ளிட்டோர் மீது 302 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.