தூத்துக்குடி, சாத்தான்குளத்தில் காவல் துறையினரின் தாக்குதலில் உயிரிழந்த தந்தை, மகனின் வழக்கு சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சாத்தான்குளத்தில் மூன்று குழுக்களாக சிபிசிஐடி காவல் துறையினர் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அவர்கள் ஜெயராஜ் கடை அருகே உள்ள கடைகள், அவரின் உறவினர்கள், பொதுமக்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், நண்பர்கள், மற்றும் ஜெயராஜ், பென்னிக்ஸின் ரத்தக்கரை படிந்த ஆதாரங்கள் உள்ள காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.