தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’சாத்தான்குளம் விவகாரத்தில் வதந்தியை பரப்பினால் கடும் நடவடிக்கை’ - காவல் துறை எச்சரிக்கை

சென்னை: சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தியை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய குற்றப்பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர்.

சாத்தான்குளம்
சாத்தான்குளம்

By

Published : Jun 29, 2020, 4:25 PM IST

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை, மகன் காவல் துறையால் தாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில், அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரும் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு சிலர், சமூக வலைதளத்தில் தவறான வீடியோக்கள் மூலம் வதந்தியை பரப்பி வந்துள்ளனர். இதையடுத்து வதந்தியை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார் சென்றுள்ளது.

இந்தப் புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், 2019ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவை, சாத்தான்குளம் சம்பவத்தோடு ஒப்பிட்டு வதந்தியை பரப்பிவருவது தெரியவந்தது. தவறான அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பரப்பிய நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

குறிப்பாக, சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளத்தில் வதந்தியை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மத்திய குற்றப்பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க: சமூக வலைதள சர்ச்சை: காவலருக்கு மெமோ அனுப்பிய எஸ்.பி.!

ABOUT THE AUTHOR

...view details