தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகள் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதாகியுள்ள எஸ்.ஐ. ரகு கணேஷ், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், "எனக்கு எதிரான வழக்கின் விசாரணை மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடக்கிறது. வழக்கு தொடர்பான சிபிஐ ஆவணங்களை கேட்டு தாக்கல் செய்த மனு மாவட்ட நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனது.
இதுவரை எனக்கு வழக்கு தொடர்பான ஆவணங்கள் வழங்கப்படவில்லை. ஆவணங்களை வழங்கினால்தான், என் மீதான வழக்கை எதிர்கொள்ள முடியும். பொய் சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், தவறான குற்றச்சாட்டுகள் உள்ளன. இதை நீக்கக் கோரிய மனுவையும் விசாரணை நீதிமன்றம் நிராகரித்தது.