தூத்துக்குடி:கடந்த சில நாள்களாகவே தொண்டர்களுடன் தொலைபேசி வாயிலாக சசிகலா பேசிய ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிவந்தன. அதனால் அரசியலில் அவர் ரீ-என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு ஆதரவாகவும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன.
இந்த நிலையில் கோவில்பட்டியில் 'அதிமுகவின் மூன்றாவது தலைமுறையே' என்ற வாசகம் கொண்ட போஸ்டர் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 18இல் பிறந்தநாள் காணும் சசிகலாவுக்கு வாழ்த்துத் தெரிவித்து மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ரூபம் வேலவன், தலைமைக் கழகப் பேச்சாளர் ராமசாமி, ஒன்றிய மாணவரணி செயலாளர் செண்பகராமன் உள்ளிட்டோர் சார்பில் கோவில்பட்டி, கயத்தாறு, கடம்பூர், கழுகுமலை பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.