தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் மாவட்ட ஆட்சியாளர்களில் 13 ஆட்சியாளர் அலுவலர்களை தமிழ்நாடு தலைமை செயலாளர் நேற்று (ஜூன் 14) அதிரடியாக இடம் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையராக சாருஸ்ரீ நியமனம் - Thoothukudi Corporation Commissioner
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் திடீர் மாற்றம் செய்யபட்டதைத் தொடர்ந்து புதிய ஆணையராக சாருஸ்ரீ நியமனம் செய்யப்பட்டார்.
![தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையராக சாருஸ்ரீ நியமனம் தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையராக சாருஸ்ரீ நியமனம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:52:17:1623680537-tn-tut-04-new-commissioner-photo-script-7204870-14062021194506-1406f-1623680106-13.webp)
தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையராக சாருஸ்ரீ நியமனம்
இதில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிவந்த சரண்யா அறி, சென்னை பெருநகர மண்டல துணை இயக்குநராக (ஒன்றிய அரசு) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு வணிக வரித்துறை இணை செயலாளராக பணியாற்றிவந்த சாருஸ்ரீ, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர், 2015ஆம் ஆண்டு மத்திய ஐஏஎஸ்-ஆக தேர்வாகி தமிழ்நாடு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.