தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீடியாக்கள் மூலம் விளம்பரம் தேடும் சீமான் - சரத்குமார் விமர்சனம் - மீடியா மூலம் விளம்பரம் தேடும் சீமான்

தூத்துக்குடி: தொலைக்காட்சி மற்றும் செய்தித் தாள்களில் விளம்பரம் தேட வேண்டும் என்பதற்காக ஒருசிலர் எதையாவது பேசத்தான் செய்வார்கள் என்று, சீமானின் சர்ச்சை பேச்சு குறித்து நடிகர் சரத்குமார் விமர்சித்துள்ளார்.

sarathkumar

By

Published : Oct 17, 2019, 9:12 PM IST

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து பரப்புரை செய்வதற்காக கூட்டணி கட்சி தலைவரான சரத்குமார் விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார்.

சீமானை விமர்சித்த சரத்குமார்

அப்போது, தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தேர்தல் பரப்புரையில் அதிமுக ஆட்சியின் சிறப்புகள், நலத்திட்டங்கள் உள்ளிட்டவற்றைக்கூறி வாக்கு சேகரிக்க இருப்பதாக கூறினார்.

தொடர்ந்து சீமானின் சர்ச்சை பேச்சு குறித்து பதில் அளித்து பேசிய அவர், ஒரு சிலர் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரம் தேட வேண்டும் என்பதற்காக எதையாவது பேச தான் செய்வார்கள், அதற்கெல்லாம் பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை என்றும், ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட செய்தியை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் தெரிவித்தார்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையின்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்தியாவின் அமைதிப்படை தமிழ் ஈழ மக்களை கொன்று குவித்தது சரி என்றால், ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டது நியாயமானதுதான். ஆம் நாங்கள்தான் கொன்று புதைத்தோம் என்று கூறியிருந்தார். இந்த சர்ச்சைக்குறிய பேச்சு தமிழ்நாட்டில் பல விவாதங்களை எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'குறை கூறுவதுதான் தற்போது அரசியல்' - ஸ்டாலினை சாடிய பிரேமலதா விஜயகாந்த்

ABOUT THE AUTHOR

...view details