தூத்துக்குடி சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ்(58), அவரது மகன் பென்னிக்ஸ்(31) ஜூன் 19ஆம் தேதி சாத்தான்குளம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதன்பின் அவர்கள் இருவரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் பென்னிக்ஸ் ஜூன் 22ஆம் தேதி இரவும் ஜெயராஜ் ஜூன் 23ஆம் தேதி அதிகாலையும் உயிரிழந்தனர். அதுதொடர்பாக கொலை வழக்குப் பதியப்பட்டது. அதையடுத்து வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்தநிலையில் தற்போது சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி வழக்கை விசாரிக்க இன்று மதியம் டெல்லி சிபிஐ அலுவலகத்திலிருந்து ஏடிஎஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையில் அனுராக் சிங், பவன்குமார் திவேதி, சைலேஷ்குமார், சுஷில் குமார் வர்மா, அஜய்குமார், சச்சின், பூனம் குமார் ஆகிய 8 பேர் கொண்ட குழுவினர் இன்று மதுரை வந்தனர்.
தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்துக்கு வந்த சிபிஐ அதைத்தொடர்ந்து தற்போது அவர்கள் காரில் மூலம் தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்துக்கு வந்தடைந்தனர். அலுவலகம் வந்த அவர்களிடம் சிபிசிஐடி விசாரணை துணை காவல் கண்காணிப்பாளர் அணில் குமார் வழக்கு தொடர்பான ஆவணங்கள், தடயங்களை வழங்கினார். தொடர்ந்து ஆலோசனை நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க:சாத்தான்குளம் லாக்கப் கொலை: ஆவணங்கள் இன்று சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும்!