தூத்துக்குடியில் சுமார் 5-ஆயிரம் தொழிலாளர்கள் வரை சங்கு குழிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்போது கன்னியாகுமரி போன்ற வெளிமாவட்டங்களில் இருந்து தொழிலாளர்களை சிலரை படகின் உரிமையாளர்கள் கூட்டி வந்து இரவு பகல் பாராமல சங்கு எடுக்கின்றனர். இதனால் உள்ளூர் சங்கு எடுக்கும் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது.
இது சம்பந்தமாக மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் உள்ளூர் சங்கு எடுக்கும் தொழிலாளர்களுக்கும் கன்னியாகுமரியில் இருந்து சங்கு எடுக்க வரக்கூடிய தொழிலாளர்களுக்கும் கைகலப்பு ஏற்படும் நிலை வந்ததால் தூத்துக்குடி சங்குகுழி மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் வெளியூரில் இருந்து சங்கு எடுக்க வரும் தொழிலாளர்களை அனுமதிக்கக்கூடாது. இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்று சங்குகுழி மீனவர்கள் சங்கத்தினர் மீன்வள இணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.