தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள எல்லை நாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள கருப்பசாமி கோயிலில் நேற்று முன்தினம் (மே 27) கொடை விழா நடைபெற்றது. இரவு 1.30 மணியளவில் சாமக்கொடை நடைபெற்றது. அப்போது தெய்வச் செயல்புரத்தைச் சேர்ந்த சாமியாடி முருகன் (65) என்பவர் வேட்டைக்குச் சென்றார்.
சுமார் 2 மணி நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதையடுத்து அப்பகுதி மக்கள் அவரை தேடி காட்டுப் பகுதிக்குச் சென்றனர். அப்போது அங்குள்ள கிணற்றில் சாமியாடி தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து, புதுக்கோட்டை காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.