தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி உப்பளங்களில் மீண்டும் உப்பு உற்பத்தி தொடக்கம்! - Thoothukudi News

தூத்துக்குடியில் உள்ள உப்பளங்களில் மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உப்பு உற்பத்தி செய்யும் பணியை உப்பளத் தொழிலாளர்கள் மீண்டும் தொடங்கியுள்ளனர்.

தூத்துக்குடி உப்பளங்களில் மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்கம்!
தூத்துக்குடி உப்பளங்களில் மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்கம்!

By

Published : Jan 19, 2023, 5:31 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள வேம்பார், தூத்துக்குடி, முத்தையா புரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி ஆகியப் பகுதிகளில் 20 ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இதில், சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். மேலும் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

நாட்டில் குஜராத் மாநிலத்திற்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி அதிகம். தூத்துக்குடி மாவட்டத்தில், ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை 6 மாதங்கள் முழு வீச்சில் உப்பு உற்பத்தி நடைபெற்றது. இதில், சுமார் 15 லட்சம் டன் உப்பு உற்பத்தியானது நடைபெற்றது. வடகிழக்குப் பருவ மழை தொடங்கிய பிறகு உப்பு உற்பத்தி சீசன் முடிவடைந்தது.

தற்போது வழக்கமாக, ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான பணிகள் மீண்டும் தொடங்கும். அதன்படி, உப்பளத் தொழிலாளர்கள் மீண்டும் உப்பு உற்பத்தியைத் தொடங்குவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டனர். இதனால் பெரும்பாலான உப்பளங்களில் ஜிப்சம் எடுக்கும் பணி நடைபெற்றது.

அதன்பிறகு, பாத்திகள் தயார் செய்யப்பட்டு தண்ணீர் நிரப்பப்பட்டன. தற்போது சில உப்பளங்களில் இருந்து உப்பு உற்பத்தி செய்யபட்டு வருகிறது. உப்பு உற்பத்தி தொடங்கி இருப்பதால் உப்பளத் தொழிலாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளனர்.

இதையும் படிங்க: பாஜக ஆதரவோடுதான் ஈபிஎஸ் முதலமைச்சரானார்: பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்

ABOUT THE AUTHOR

...view details