தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடமாடும் மளிகை, காய்கறி விற்பனை - அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்! - etv செய்திகள்

தூத்துக்குடி: மாவட்டத்தில் 76 வாகனங்களில் மளிகை காய்கறி விற்பனையை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடியில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை - அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடியில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை - அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்

By

Published : May 25, 2021, 6:58 AM IST

தமிழ்நாட்டில் இன்று(மே.24) முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பொது மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்குச் சென்று விற்பனை செய்யும் பணிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கப்பட்டன. மாவட்ட கூட்டுறவுத் துறை சார்பாக வீடு வீடாக சென்று காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்ய நடாமாடும் காய்கறி வாகனங்களை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதாஜீவன், "ஊரடங்கு நாட்களில் மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக சிரமப்பட கூடாது என்பதற்காக மாவட்ட நிர்வாகம், தனியார் பங்களிப்புடன் காய்கறி, மளிகை பொருட்கள், இறைச்சி, முட்டை ஆகியவற்றை வீடு வீடாக சென்று விற்பனைச் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது மாநகர் முழுவதும் 76 வாகனங்களில் விற்பனை செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன. தேவைப்பட்டால் விருப்பத்தின் பேரில் வணிகர்களும் வாகனத்தில் சென்று பொருட்களை விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும்" என்றார்.

தூத்துக்குடியில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை - அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
தொடர்ந்து "அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்வதைத் தடுக்க, ஒரே விலையில் விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக கூட்டுறவு சங்கத்தின் மூலம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது" என்றார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சரண்யா உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.இதையும் படிங்க:ரஜினியை விட ரூ.1 லட்சம் அதிகம் கொடுத்த ரஜினி மக்கள் மன்றம் நிர்வாகி'

ABOUT THE AUTHOR

...view details