தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வ.உ.சி கனவை நிறைவேற்றியவர் பிரதமர்' இணை அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்! - Union Minister give loan to fisher man thoothukudi

Sagar Parikrama Yatra: ‘சாகர் பரிக்ரமா திட்டத்தின்’ கீழ் நடைபெறும் யாத்திரையில் மத்திய மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீ பர்ஷோத்தம் ரூபாலா தூத்துக்குடியில் உள்ள மீனவர்களைச் சந்தித்து கடன் உதவிகளை வழங்கினார்.

மத்திய மீன்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தூத்துக்குடியில் உள்ள மீனவர்களைச் சந்தித்து கடன் உதவிகளை வழங்கினார்.
மத்திய மீன்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2023, 5:34 PM IST

Updated : Sep 2, 2023, 5:40 PM IST

சாகர் பரிக்ரமா திட்டத்தின் யாத்திரை

தூத்துக்குடி:வ.உ.சி கனவை நிறைவேற்றியவர் பிரதமர் நரேந்திர மோடி என்றும், தமிழகத்தில் காசிமேடு துறைமுகத்தை சர்வதே தரமாக உயர்த்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ‘சாகர் பரிக்ரமா திட்டத்தின்’ கீழ் நடைபெறும் யாத்திரையில் மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்.

‘சாகர் பரிக்ரமா திட்டத்தின்’ கீழ் மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா மாநிலம் முழுவதும் மீனவ மக்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில், தூத்துக்குடியில் உள்ள மீன்பிடி துறைமுகத்திற்கு வருகை தந்த அவர், அங்குள்ள கடற்கரை கிராம மீனவ விவசாயிகளைச் சந்தித்து அவர்களுக்கு கடன் அட்டைகள் மற்றும் கடல்பாசி தொழில் செய்வதற்கான கடன் உதவிகளை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து, மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா பேசியதாவது, "கடந்த 2014 முதல் 2023ஆம் ஆண்டு தற்போது வரை மீன் உற்பத்தி இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. மீனவர்களுக்கு அரசு பல நலத்திட்டங்களை செய்து வருகிறது. அவர்களுக்கு மீன்பிடி தொழில் மட்டுமின்றி மாற்று வருமானத்திற்கு ஏற்ற வகையில் கடற்ப்பாசி வளர்ப்பு, அக்குவா கல்சர் உள்ளிட்ட பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. மீனவர்களின் நலனுக்காக கடன் அட்டைகளை மத்திய அரசு அளிக்க தொடங்கியுள்ளது. இதுவரை 5 கோடி ரூபாய்கான கடன் அட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் பிரச்னைகளை தெரிந்து கொள்வது தான் சாகர் பரிக்ரமா திட்ட பயணத்தின் நோக்கமாகும்" என்று கூறினார்.

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது, பாரத பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாக மீனவ மக்களுக்காக மீன்வளத்துறை அமைச்சகத்தை ஏற்படுத்தியுள்ளார். மத்திய அரசு மீனவர்களுக்காக தனி துறையை உருவாக்கி 38 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்துள்ளது. பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மீனவர்களுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்களின் பயனை எடுத்துச் சொல்வதற்காக சாகர் பரிக்ரமா பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 9 ஆண்டுகளில் மீன்வளத்துறை மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றது” என்று கூறினார்.

மேலும், "இந்த யாத்திரையானது, 3,500 கிலோமீட்டர் குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கேரளா, கர்நாடகா கடல் கடந்து தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரியை தொடர்ந்து தற்போது தூத்துக்குடியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த யாத்திரை இன்னும் 5,000 கிலோமீட்டர் போக வேண்டி உள்ளது. மொத்தம் 8,500 கிலோமீட்டர் பயணமாகும்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "வ.உ.சி பிறந்த பூமி தூத்துக்குடி, உள்நாட்டு கப்பல் இருக்க வேண்டும் என்று வெள்ளையருக்கு எதிராக சுதேசி கப்பலை இயக்கியவர். நாட்டின் பொருட்கள் தூத்துக்குடியில் இருந்து அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு மேக் இன் இந்தியா திட்டம் மூலம் வ.உ.சி அவர்களின் கனவை நிறைவேற்றி தந்திருப்பது நரேந்திர மோடி மட்டுமே. மீன் பொருட்கள் ஏற்றுமதியில் நான்காவது இடத்தில் இந்தியா இருக்கின்றது. மீனவர்கள் ஆழ் கடல் மீன் பிடிப்பதற்காக ஒரு கோடி 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பெரிய விசைப்படகு வாங்குவதற்கு 60% மானியம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 50 மீனவர்களுக்கு இந்த மானியம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை கட்டமைப்பதில் மீனவருடைய பங்கு இருக்கிறது. எனவே, மீனவர்கள் கடினமாக உழைக்க வேண்டும்" என்று கூறினார்.

அதனைத்தொடர்ந்து, மீன்பிடி தொழிலாளர் சங்க செயலாளர் ஜவகர் பேசியதாவது, "பிரதமர் மோடி நாட்டை வளர்ச்சி பாதையை நோக்கி கொண்டு சென்று இருக்கின்றார். ஆனால், மீனவர்கள் வாழ்வாதாரமோ கீழ் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 250 விசைப்படகு மற்றும்10 ஆயிரம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லும் போது அடிப்பட்டால் முதலுதவி செய்ய இயலாது. இவர்களை பாதுகாக்க எந்த செயல்பாடும் இல்லை. மீனவனை பாதுகாக்க ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கடல் ஆம்புலன்ஸ் வேண்டும். மேலும், தூத்துக்குடியில் கடலுக்கு சென்று மீன்பிடிக்க உரிமம் தர வேண்டும்" என்று கூறினார்.

இந்நிலையில், நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கும் போது பார்வையாளர்கள் அமர்ந்திருந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த எல்இடி திரை கீழே சரிந்து விழுந்தது. இதில் மத்திய அரசு தொலைக்காட்சி நிறுவன ஊழியர் ஒருவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. பின்னர் உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதன் காரணமாக விழாவில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:கோயில்களில் மூடி வைக்கப்பட்டிருக்கும் வடக்கு கோபுர வாசல்களை உடனடியாக திறக்க வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு!

Last Updated : Sep 2, 2023, 5:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details