தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ரயில்வே கிராசிங் பாதையை மூடக் கூடாது' ஆட்சியரிடம் மனு கொடுத்த செம்பூர் கிராம மக்கள்! - செம்பூர் கிராம மக்கள் மனு

தூத்துக்குடி: ரயில்வே கிராசிங் பாதையை மூடும் முடிவை அரசு கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் செம்பூர் கிராம மக்கள் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

rail
rail

By

Published : Oct 19, 2020, 7:19 PM IST

தூத்துக்குடி மாவட்டம் செம்பூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், இன்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியைச் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "செம்பூர் கிராமத்தில் சுமார் இரண்டாயிரம் குடும்பத்தினர் வசித்துவருகிறோம். எங்கள் ஊரில் ரயில்வே கிராசிங்கை மத்திய அரசு தற்போது நிரந்தரமாக மூட உள்ளதாகத் தகவல் தெரிகிறது. இதை மத்திய அரசு மூடினால் எங்கள் ஊரைச் சேர்ந்த பொதுமக்களின் அத்தியாவசியப் பணிகள் கடுமையாகப் பாதிக்கும். குறிப்பாக மருத்துவத் தேவைகளுக்காக வெளியூர் செல்வதற்கும், பள்ளிக் கல்லூரி மற்றும் ஏணைய வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதற்கு அந்த வழியையே எங்கள் கிராம மக்கள் பயன்படுத்திவருகின்றனர்.

மத்திய அரசு அந்த ரயில்வே கிராசிங்கை மூடினால் மாணவர்கள், பொதுமக்களுக்குக் கடுமையான பாதிப்பு ஏற்படும். இதனால் மக்கள் கிட்டத்தட்ட மூன்று கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்படுவதால் சரியான நேரத்திற்குச் செல்ல முடியாது. ஆகவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு ரயில்வே கிராசிங்கை மூடும் முடிவை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

ABOUT THE AUTHOR

...view details