தூத்துக்குடியில் உள்ள மாவட்ட நீதிமன்றம் மற்றும் விளாத்திக்குளம், கோவில்பட்டி, திருச்செந்தூர், சாத்தான்குளம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அமர்வு நீதிமன்றங்களில் லோக் அதாலத்தில் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதை மாவட்ட நீதிபதி சுரேஷ் விஸ்வநாத் தொடங்கிவைத்தார்.
உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளரின் குடும்பத்துக்கு ரூ.27 லட்சம் இழப்பீடு...!
தூத்துக்குடி: சாலை விபத்தில் உயிரிழந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் குடும்பத்துக்கு, லோக்அதாலத் நிகழ்ச்சியின் மூலம் 27 லட்சம் ரூபாய் உடனடி இழப்பீடு வழங்கப்பட்டது.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 3,705 நீதிமன்ற வழக்குகள், 924 வங்கி வழக்குகள் என மொத்தம் 4 ஆயிரத்து 629 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இதில் 50 நீதிமன்ற வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு முடிவு எட்டப்பட்டு 3 கோடியே 2 லட்சத்து 97 ஆயிரத்து 500 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.
இதில், சாலை விபத்தில் உயிரிழந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்துக்கு உடனடி இழப்பீடாக ரூ. 27 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும், சிறிய வழக்குகள் அனைத்தும் முடித்து வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.