தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தூத்துக்குடியில் ரவுடிசம் பெருகிவிட்டது' - வியாபாரிகள் பரபரப்பு நோட்டீஸ்! - tuticorin

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் திருட்டு, போதைப்பொருள், கடத்தல் சம்பவம், ரவுடியிசம் பெருகி விட்டதாக வியாபாரிகள் நோட்டீஸ் விநியோகம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் ரவுடிசம் பெருகிவிட்டது
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் ரவுடிசம் பெருகிவிட்டது

By

Published : Nov 27, 2022, 3:20 PM IST

தூத்துக்குடி:கடல் நகரமான தூத்துக்குடியில் கடந்த சில மாதங்களாக வழிப்பறி, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனர். இதனை தடுக்க மாவட்ட காவல்துறையினர் கடும் முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடி-திருச்செந்தூர் செல்லும் வழியில் முத்தையாபுரம் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் 200 மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு, திருட்டு, போதைப்பொருள் கடத்தல் சம்பவம், ரவுடிசம் பெருகிவிட்டதாகவும் அதனை முத்தையாபுரம் போலீசார் தடுக்க தவறிவிட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. மேலும், இந்த குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டு முத்தையாபுரம், ஸ்பீக் நகர், முள்ளக்காடு பகுதி அனைத்து வியாபாரிகள் சங்கங்கள் சார்பில், அங்குள்ள வியாபாரிகளிடம் துண்டு பிரசுரம் விநியோகம் செய்ய இருந்தனர்.

அவற்றை கைப்பற்றிய போலீசார் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அந்த துண்டு பிரசுரத்தில் கூறியுள்ளதாவது, “கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக திருட்டு, வழிப்பறி, கஞ்சா, ரவுடிசம் பெருகி விட்டன. இதுவரை காவல்துறை கட்டுபடுத்தவோ, குற்றவாளிகளை கண்டுபிடிக்கவே முடியவில்லை. பல முறை நாங்கள் குற்றவாளிகளை கண்டுபிடித்து கொடுத்தும், மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் வருங்காலங்களில் தங்களின் உடமைகளையும், தாங்களே பாதுகாத்திட வேண்டும்” என அச்சிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல் துணை கண்காணிப்பாளர் சத்திய ராஜ் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பின்னர் கண்காணிப்பு கேமரா, காவல்துறையினர் அதிகப்படுத்துவதாகவும், தவறும் செய்யும் குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:tnusrb exam: 1 கி.மீ தூரம் காத்திருந்த பெண் தேர்வர்கள்!

ABOUT THE AUTHOR

...view details