தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் உதவி ஆய்வாளர் மகராஜன் தலைமையிலான காவல் துறையினர், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தாளமுத்துநகர் மெயின் ரோட்டில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.
தூத்துக்குடியில் துப்பாக்கியுடன் சாலையில் சுற்றிய பிரபல ரவுடி! - Tuticorin gun issue
தூத்துக்குடி: சாலையில் கள்ளத்துப்பாக்கியுடன் சுற்றிக்கொண்டிருந்த பிரபல ரவுடி தவிடுவை, காவல் துறையினர் கைது செய்தனர்.
அப்போது, அவரிடம் ஏர் பிஸ்டல் துப்பாக்கி, 87 தோட்டாக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில், அவர் பழைய காயல் புல்லாவெளி கிராமத்தை சேர்ந்த அய்யாக்குட்டி மகன் ஜெயராஜ் என்ற தவிடு (50) என்பதும், அவர் மீது ஏற்கனவே ஆத்தூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கும், கொலை மிரட்டல் உட்பட 3 வழக்குகளும் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, உரிமமின்றி துப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்காக அவரை கைது செய்து, துப்பாக்கி, தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்