தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூரைச் சேர்ந்தவர் மாயகிருஷ்ணன் (22), வேலாயுதபுரத்தைச் சேர்ந்தவர்கள் முத்துராஜ் (19), மாரிசெல்வம் (20). இவர்கள் மூன்று பேரும் இரண்டு இருசக்கர வாகனங்களைத் திருடியதாக புதியம்புத்தூர் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.
இதையடுத்து, அவர்களைச் சிறையில் அடைப்பதற்காக புதியம்புத்தூர் சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையில் காவலர் சுடலைமுத்து காவல் துறை வாகனத்தில் தூத்துக்குடி நீதித் துறை நடுவர் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தினர்.
இதன் பின்னர் கைதானவர்கள் மூன்று பேரும் பேரூரணி சிறையில் அடைப்பதற்காக நள்ளிரவில் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது சிறை அருகே வாகனம் வேகத்தடையில் ஏறி இறங்கியபோது, பின் இருக்கையில் அமர்ந்திருந்த மாயகிருஷ்ணன் கதவை திறந்து தப்பிச் சென்றுவிட்டார்.