தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உயரும் தீப்பெட்டி விலை -டிசம்பர் 1 முதல் அமல்! - thoothukudi latest news

வரும் டிசம்பர் முதல் 50 குச்சிகள் கொண்ட ஒரு தீப்பெட்டியின் விலை ரூ.1 அதிகரித்து 2 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.

உயரும் தீப்பெட்டி விலை
உயரும் தீப்பெட்டி விலை

By

Published : Oct 24, 2021, 1:09 PM IST

தூத்துக்குடி : தீப்பெட்டிகள் தயாரிக்கும் மூலப்பொருள்களின் விலை அதிகரிப்பு, போக்குவரத்து செலவு உயர்வு காரணமாக, ஒரு ரூபாயில் இருந்து இரண்டு ரூபாயாக தீப்பெட்டி விலையை உயர்த்தியுள்ளதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த விலை உயர்வு டிசம்பர் 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வருகிறது.

உயரும் தீப்பெட்டி விலை

தீப்பெட்டி விற்பனை விலை 2007ஆம் ஆண்டு தொடங்கி மாற்றமில்லாமல் ஒரு ரூபாய் என்ற நிலையிலேயே விற்பனையாகி வந்தது. தற்போது, மூலப்பொருள்களின் விலை, மின்சாரக் கட்டணம், லாரி வாடகை ஆகியவை உயர்வால் தீப்பெட்டி விலையை உயர்த்த வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கையை முன் வைத்தனர்.

தீப்பெட்டி இரண்டு ரூபாய்

அதன்படி, அகில இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், சிவகாசியில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், டிசம்பர் 1ஆம் தேதி முதல் 50 குச்சிகள் கொண்ட தீப்பெட்டியை இரண்டு ரூபாய்க்கு விற்பனைசெய்ய முடிவு எடுக்கப்பட்டது.

உயரும் தீப்பெட்டி விலை

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நேஷனல் சிறுதீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் வி.எஸ்.சேதுரத்தினம் கூறுகையில், ”கடந்த 1995ஆம் ஆண்டு 50 பைசாவாகவும், 2007ஆம் ஆண்டு ஒரு ரூபாயாகவும் தீப்பெட்டி விலை நிர்ணயிக்கப்பட்டது. அதன் பின்னர் விலை உயர்த்தப்படவில்லை.

அக்டோபர் 10ஆம் தேதிக்குப் பின்னர், பொட்டாசியம் குளோரேட் 63 ரூபாயில் இருந்து ரூ.78 ரூபாய்க்கும், சல்பர் 24 ரூபாயில் இருந்து 31 ரூபாய்க்கும், மெழுகு 58 ரூபாயில் இருந்து 80 ரூபாய்க்கும், சிவப்பு பாஸ்பரஸ் 425 ரூபாயில் இருந்து 810 ரூபாய்க்கும் என மூலப்பொருள்கள் கடுமையான விலை ஏற்றத்தை சந்தித்துள்ளன. எனவே 50 குச்சிகள் கொண்ட தீப்பெட்டி இரண்டு ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

இதையும் படிங்க : பெட்ரோலை துரத்தும் டீசல்.. 100-ஐ தாண்டிய அவலம்.. விழிபிதுங்கும் வாகன ஓட்டிகள்..!

ABOUT THE AUTHOR

...view details