தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தூத்துக்குடி: வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

cyclone
cyclone

By

Published : Apr 3, 2021, 8:43 PM IST

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்துள்ளது.

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் இயல்பை விட 4 முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்ந்து காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வங்கக்கடலில் நிலவும் புயல் சின்னம் காரணமாக தமிழ்நாட்டுத் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதையொட்டி தூத்துக்குடி, திருவள்ளூர், எண்ணூர், நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் துறைமுகங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால், சற்று பலமாக காற்று வீசும். எனவே மீனவர்கள் யாரும் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details