தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெற்ற தந்தையின் கல்லறையை உடைத்த கொடூரம் - போலீஸ்கார மகன் மீது தாய்ப் புகார்! - property case

இடம் கொடுத்தால் மாதம் பணம் தருவதாகக் கூறி இடத்தைப் பெற்று, தன் கணவனின் கல்லறையை உடைத்த மகனின் மீது நடவடிக்கை எடுக்க தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.

சாத்தான்குளத்தில் தந்தையின் கல்லறையை சொத்திற்காக மகனே உடைத்த கொடூரம்!
சாத்தான்குளத்தில் தந்தையின் கல்லறையை சொத்திற்காக மகனே உடைத்த கொடூரம்!

By

Published : Jul 4, 2023, 3:19 PM IST

சாத்தான்குளத்தில் தந்தையின் கல்லறையை சொத்திற்காக மகனே உடைத்த கொடூரம்!

தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே உள்ள குலசேகரன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர், சௌந்தர ராணி. இவருடைய கணவர் ரத்தினசாமி. இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சௌந்தர ராணி கணவன் இறந்த பிறகு, அவரது பண்ணை வீட்டில் இளைய மகனுடன் வசித்து வருகிறார்.

அவரின் மூத்த மகனான சுடலைராஜ் மெய்ஞானபுரம் போலீஸ் ஸ்டேஷனில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் பண்ணை வீடு அருகிலேயே சுடலைராஜ் புதிய வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். பண்ணை வீட்டிற்குப் பின்புறம் அவரின் தந்தை ரத்தினசாமியின் கல்லறை உள்ளது.

இந்த நிலையில் சுடலைராஜ், தன்னுடைய தந்தையின் கல்லறையைக் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இரவில் தரைமட்டமாக உடைத்துள்ளார். இதை அறிந்த தாயார் சுடலைராஜிடம் இது குறித்து கேட்டுள்ளார். அதற்கு சுடலைராஜ், தந்தை கல்லறை இருப்பதினால், தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்படுகிறது எனவும்; அதனால் கல்லறையை இடித்து விட்டேன் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:திச, திஈய, குவிரன் - நெல்லையில் அடுத்தடுத்து அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தமிழ் எழுத்துகளும் பெயரும்!

இதனால் தனது கணவரின் கல்லறையை உடைத்ததை கண்டு மனமுடைந்த சௌந்தர ராணி சாத்தான்குளம் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவல் துறையினர் சுடலைராஜிடம் அவரது தந்தையின் கல்லறை இருந்த இடத்தில் 15 நாட்களுக்குள் அதே இடத்தில் கட்டி கொடுக்க வேண்டும் என்று சொல்லி அனுப்பி உள்ளனர்.

ஆனால், 15 நாட்கள் கழித்தும் கல்லறையை கட்டிக் கொடுக்காததால், அவருடைய தாயார் சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகத்திற்கு தன்னுடைய கணவரின் கல்லறையை, அதை இடத்தில் கட்ட வேண்டும் என்று புகார் அளிக்கச் சென்றுள்ளார்.

சாத்தான்குளம் டிஎஸ்பி அங்கு இல்லாததால், அதிகாரியிடம் புகார் மனுவை அளித்துள்ளார். இது குறித்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் இந்த விவகாரத்தில் தலையிட்டு தனது கணவரின் கல்லறை இருந்த இடத்தில் சுடலைராஜ் மீண்டும் புதிய கல்லறை கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

பின்னர் கூறிய சௌந்தர ராணி, தன்னிடம் இடத்தை கொடுத்தால் மாதம் இரண்டாயிரம் தருவதாகக் கூறி தன்னிடம் ஏமாற்றி சுடலை ராஜ் கையெழுத்து வாங்கியதாகக் கூறினார்.சொத்திற்காக பெற்ற தந்தையின் கல்லறையை உடைத்து அகற்றிய மகனின் செயல் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:CM Stalin discharged: வீடு திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details