தூத்துக்குடி:ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட அனுமதி வரும் ஜூலை 31ஆம் தேதிவுடன் முடிவடைகிறது.
இந்தநிலையில் கரோனா 3ஆவது அலை பரவக்கூடும் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுக்க ஸ்டெர்லைட் ஆலையில் தொடர்ந்து ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.
பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கவன ஈர்ப்பு போராட்டம் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவாக தூத்துக்குடி, அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள் நேற்று (ஜூலை 28) கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீளவிட்டான், சாமிநத்தம், ராஜாவின் கோவில், மடத்தூர், தெற்கு சங்கரபேரி, வடக்கு சங்கரபேரி, அய்யனடைப்பு, தெற்கு வீரபாண்டியபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் 'முன்னெச்சரிக்கை முக்கியமானது உயிர்கள் விலைமதிப்பற்றது, எனவே ஆக்ஸிஜன் உற்பத்தியை மேலும் ஆறு மாத காலம் நீட்டித்து அனுமதிக்க வேண்டும்' என்ற விளம்பரத்துடன் போராட்டம் நடத்தினர்.
போராட்டம் நடத்துவதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் பொதுமக்கள் சிறிது நேரத்தில் கலைந்து சென்றனர். இதனிடையே தெற்கு வீரபாண்டியபுரம் கிராமத்தில் போராட்டம் நடத்த முயன்ற சிலரை முன்னெச்சரிக்கையாக காவலர்கள் கைது செய்தனர்.
இதையும் படிங்க:கரோனா பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டு வருவோம் - அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர்