முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், பேரறிவாளன் ஆகிய 7 பேரும் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில் பேரறிவாளன் கடந்த மே மாதம் 18ஆம் தேதி உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், நேற்று(நவ.11) முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் உள்ள சூரப்பநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரனும் ஒருவர். பரோலில் உள்ளார். விடுதலை செய்ய நீதிமன்ற உத்தரவிட்டதைத் தொடர்ந்து ரவிச்சந்திரன் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.