தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விளாத்திகுளம் அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது: 50 மூட்டை அரிசி, வாகனம் பறிமுதல் - விளாத்திக்குளம் அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

விளாத்திகுளம் அருகே ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது செய்யப்பட்டு 50 மூட்டைகள், வாகனம் ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டன.

ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது
ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது

By

Published : Jun 22, 2021, 8:51 PM IST

தூத்துக்குடி: விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில் விளாத்திகுளம் ஆற்றங்கரை கிராமத்தில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த TN72 AF 7651 என்ற வாகனத்தைச் சோதனை செய்தனர்.

இதில் 50 மூட்டை ரேஷன் அரிசி இருப்பதும், அவற்றை கடத்துவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வாகன ஓட்டுநரான கயத்தாறு அகிலாண்டபுரத்தைச் சேர்ந்த மகாராஜன் (29) என்பவரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனத்தையும், ரேஷன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்து தூத்துக்குடி குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறையிடம் ஒப்படைத்தனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details