தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு: ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பப்படும் - ஒரு நபர் ஆணையம்

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிப்பதற்கு நடிகர் ரஜினிகாந்துக்கு ஜனவரி மாதத்தில் சம்மன் அனுப்பப்படும் என ஒரு நபர் ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல் தெரிவித்தார்.

one person commission
one person commission

By

Published : Dec 17, 2020, 5:54 PM IST

தூத்துக்குடியில் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.

23ஆவது கட்ட விசாரணை

இந்த ஆணைய அலுவலர் மாதம்தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் விசாரணை நடத்தி வந்தார். அதன்படி ஏற்கனவே 22ஆவது கட்ட விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் மற்றும் ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டன. 23ஆவது கட்ட விசாரணை தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை அலுவலர் அருணா ஜெகதீசன் தலைமையில் கடந்த 14ஆம் தேதி தொடங்கி நாளை (டிச.18) வரை நடக்கிறது.

இன்று (டிச.17) நான்காவது நாளாக விசாரணை நடந்தது. இதுவரை மொத்தம் 42 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பப்படும்

ஒருநபர் ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல்

இதுகுறித்து ஒருநபர் ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல் கூறுகையில், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 23ஆவது கட்டமாக விசாரணை நடந்தது. இதில் 49 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. தீயணைப்புத் துறையை சேர்ந்தவர்கள், காவலர் குடியிருப்புகளை சேர்ந்தவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணைக்காக அழைக்கப்பட்டனர்.

ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பப்படும்

இதுவரை 586 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 775 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக வருகின்ற ஜனவரி மாதம் 24ஆவது கட்ட விசாரணை நடைபெறும். இதில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பப்படும். சம்பவ நடந்த சமயத்தில் இருந்த ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரும் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள். இந்த சம்பவம் தொடர்பாக இன்னும் 500 பேருக்கும் மேல் விசாரணை நடத்தப்படும்" என்றார்.

இதையும் படிங்க:சிலிண்டர் விலை உயர்வுக்கு புதுச்சேரி முதலமைச்சர் கண்டனம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details