தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ஆதாரம் இல்லை - நடிகர் ரஜினிகாந்த் - தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ஆதாரம் இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் மனு குறித்து செய்தியாளர் சந்திப்பு
ரஜினிகாந்த் மனு குறித்து செய்தியாளர் சந்திப்பு

By

Published : Apr 22, 2021, 10:03 PM IST

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த ஒரு நபர் விசாரணை கமிஷனின் 27-வது கட்ட விசாரணை கடந்த திங்கட்கிழமை தொடங்கி நாளை (ஏப்ரல்.23) வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் கூறியதாவது, "ஆணையத்தின் 27-வது கட்ட விசாரணை நாளையுடன் நிறைவு பெறுகிறது. துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டதில்
48 பேர் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர்.

முதற்கட்டமாக சிபிஐ 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து கூடுதலாக அதில் 44 பேர் பெயர்களை சேர்த்தது. அதில் தற்போது கூடுதலாக காவல் ஆய்வாளர் திருமலை என்பவரின் பெயரை சேர்த்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற சமயத்தில் புதுக்கோட்டை ஆய்வாளராக இருந்த திருமலை, சட்டவிரோதமாக பொதுமக்களை வல்லநாடு துப்பாக்கி சூடு தளத்தில் வைத்து விசாரணை நடத்துதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் மீது பொது சொத்தை சேதப்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், பயங்கர ஆயுதங்களை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் காவலர்கள் தவிர சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ள பொதுமக்களிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. காவலர்களிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. இதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் குடியிருப்பில் தங்கியிருந்தவர்கள், ஸ்டெர்லைட் ஆலை பணியாளர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துப்பாக்கி சூடு சம்பவத்தன்று பணியில் இருந்தவர்கள், அப்போதைய மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படும்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து இதுவரை 1,052 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டதில் 719 பேர் ஆணையத்தின் முன்பு ஆஜராகி விளக்கமளித்துள்ளனர். 1,126 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் அடுத்த கட்ட விசாரணை மே மாதம் 17-ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதி வரை நடைபெறும். அடுத்த கட்ட விசாரணையின் பொழுது துப்பாக்கிச்சூடு தினத்தன்று பந்தோபஸ்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், காயம்பட்ட காவலர்கள் ஆகியோரை விசாரிக்க திட்டமிட்டுள்ளோம்.

ரஜினிகாந்த் மனு குறித்து செய்தியாளர் சந்திப்பு

துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கு விளக்கம் கேட்டு ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அதற்கு நடிகர் ரஜினிகாந்த் தனது வழக்கறிஞர் மூலமாக ஆணையத்தில் அபிடவிட் தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், துப்பாக்கி சூடு குறித்து நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு திட்டமிட்டு செய்யப்பட்டது அல்ல. அது எதிர்பாராத விதமாக நிகழ்ந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு. அன்றைய தினம் பத்திரிகையாளர்களிடம் பேசியது எதார்த்தமாக கூறியதுதான். இருப்பினும் நடிகர் ரஜினிகாந்திடம் சில சந்தேகங்களை தீர்க்க வேண்டி உள்ளதால் தற்போது உள்ள கரோனா பரவல் குறைந்ததும் விசாரணை நடத்துவோம்" என்றார்.

இதையும் படிங்க: வாட்ஸ்அப் நிறுவன கோரிக்கையை தள்ளுபடி செய்த டெல்லி உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details