மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தேர்தல் பரப்புரையின்போது 'இந்து தீவிரவாதி' என பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதனைக் கண்டித்து, 'கமல்ஹாசனின் நாக்கு அறுக்கப்பட வேண்டும்' என்று தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடும் விமர்சனம் செய்தார். இதற்கு, மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுச்செயலாளர் அருணாச்சலம், "அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது பதவி பிரமாண உறுதிமொழியை மீறி இருக்கிறார். எனவே, அவர் பதவி விலக வேண்டும்" என்று சாடி அறிக்கை வெளியிட்டார்.
இதற்கு பதிலளித்து, தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர பாலாஜி, "கமல்ஹாசன் கட்சி ஒன்றும், ஐநா சபையின் அங்கீகாரம் பெற்ற அமைப்பு கிடையாது. அவர்கள் செய்வது எல்லாமே தில்லு முல்லு. இந்தியாவின் மத நல்லிணக்கத்தை கெடுப்பதுபோல செயல்படுகிறார்கள். நான் எந்த வகையிலும் பதவிப் பிரமாண உறுதிமொழியை மீறவில்லை. பயங்கரவாத தூண்டுதல் செய்யவில்லை. மக்களின் மனதை புண்படுத்தும் விதமாக பேசவில்லை.