திமுகவின் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் பயணத்தின் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் ஒன்றிய பகுதியில் திமுக மாநில தேர்தல் பணிக்குழு துணைத்தலைவர் கண்ணப்பன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இதில் கட்டாலங்குளத்தில் உள்ள வீரன் அழகுமுத்துக்கோன் மணி மண்டபத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தார்.
அப்போது அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடினார். பின்னர் கோவில்பட்டி அருகே கயத்தாறு பேருந்து நிலையம் அருகே உள்ள டீக்கடையில் பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.