தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாய நிலத்தில் கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு - thoothukudi district news

தூத்துக்குடி: இலந்தைகுளம் பகுதியில் விவசாய நிலத்தில் கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

விவசாய நிலத்தில் கல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு
விவசாய நிலத்தில் கல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு

By

Published : Nov 2, 2020, 7:52 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகாவுக்குள்பட்ட தெற்கு இலந்தைகுளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் இன்று (நவ. 02) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்தித்து விவசாய நிலத்தில் கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மனு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் விவசாயிகள் பேசியதாவது, "தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்துக்குள்பட்ட கம்மாபட்டி கிராமத்தில் எங்களுக்குச் சொந்தமாக 74 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் விவசாய பயிர்களான சீனி அவரை, சீனி கிழங்கு, பட்டை அவரை, மக்காச்சோளம் மற்றும் பழ வகைகளை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறோம்.

ஆனால் எங்கள் நிலத்தின் சர்வே எண்ணிற்கு அருகிலேயே கல்குவாரி அமைப்பதற்கு அனுமதி கேட்டு தஞ்சாவூரைச் சேர்ந்த தனியார் நபர்கள் விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது. விவசாய நிறுத்தத்திற்கு அருகிலேயே கல்குவாரி அமைக்க நேரிட்டால் விவசாயம் பாதிக்கப் படுவதோடு எங்களது வாழ்வாதாரமும் முடங்கிப் போகும்.

எனவே அவ்விடத்தில் கல்குவாரி அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க கூடாது" எனக் கேட்டுக் கொண்டனர்.

இதையும் படிங்க: கல் குவாரியிலிருந்து சிதறும் கற்களால் சிதைந்த விவசாயம்: கண்டு கொள்ளுமா மாவட்ட நிர்வாகம்?

ABOUT THE AUTHOR

...view details