இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் அனைத்து வீடுகளிலும் தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. கழிப்பறை கட்ட வசதி இல்லாதவர்கள் பயன்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த சமுதாய சுகாதார வளாகங்கள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியாக கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
தூய்மை பாரத போட்டி: தூத்துக்குடிக்கு 2 தேசிய விருதுகள்
தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஸ்வட்ச் சுந்தர் சமுதாயிக் சௌசாலயா போட்டியில் 2 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
இந்திய அரசால், ஜல் சக்தி அமைச்சகத்திலிருந்து தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் உள்ள சமுதாய சுகாதார வளாகங்களை பராமரித்தல் மற்றும் பொது மக்கள் பயன்படுத்துதல் குறித்து நவம்பர்1 2019 முதல் ஏப்ரல் 30 2020 வரை ஸ்வட்ச் சுந்தர் சமுதாயிக் சௌசாலயா (SSSS) என்ற பெயரில் நடத்தப்பட்ட போட்டியில் மிக சிறப்பாக செயல்படும் மாவட்டம், ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டதில், இந்திய அளவில் சிறப்பாக செயல்படும் மாவட்டங்களுக்கான போட்டியில் இந்திய அளவில் தூத்துக்குடி மாவட்டம் இரண்டாம் இடத்தையும், ஊராட்சி ஒன்றியங்களுக்காக நடத்தப்பட்ட போட்டியில் இந்திய அளவில் தூத்துக்குடி மாவட்டம் - திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் மூன்றாம் இடத்தையும் பெற்றது.
இதற்கான விருதுகள் காந்தி ஜெயந்தி அன்று நடத்தப்பட்ட விழாவில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தால் காணொலி காட்சி மூலம் அறிவிக்கப்பட்டு வழங்கப்படடுள்ளது" என குறிப்பிடப்பட்டிருந்தது.