தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கழிவுநீரை அகற்றக்கோரி கோவில்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்! - protest infront of kovilpatti

தூத்துக்குடி: பழத்தோட்ட நகரில் தேங்கியிருக்கும் கழிவுநீரை உடனடியாக அகற்றக்கோரி, கோவில்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

pro
pro

By

Published : Nov 10, 2020, 2:41 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சியில் உள்ள பழத்தோட்ட நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.இங்கு மழைக்காலங்களில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தெருக்களில் தேங்கி நிற்பதால், கழிவுநீரை அகற்றக்கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் பல முறை புகாரளித்துள்ளனர். ஆனால், இதுவரை எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று, பழத்தோட்ட நகரை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மக்கள் கோவில்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கழிவுநீரை அகற்ற வேண்டும் என்றும், தங்கள் பகுதியில் பொது கழிப்பிடம் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த போராட்டத்தில் பொதுமக்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் இணைந்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ABOUT THE AUTHOR

...view details