தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிநீர் இணைப்பு கேட்டு பொதுமக்கள் போராட்டம் - Road work

தூத்துக்குடி: கோவில்பட்டியில் குடிநீர் இணைப்பு வழங்காமல் சாலை அமைக்கும் பணி நடப்பதை கண்டித்து நகராட்சி பொறியாளர் அறையில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Public protest demanding drinking water connection
Public protest demanding drinking water connection

By

Published : Sep 2, 2020, 9:22 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 30ஆவது வார்டு பகுதியில் 2ஆவது குடிநீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கான புதிய குடிநீர் இணைப்பு வழங்காமல் சாலை அமைக்கும்பணி தொடங்கப்படுகிறது. இதை கண்டித்தும், குடிநீர் இணைப்புப் பணி நிறைவு பெறாத இடங்களுக்கு பணிகள் நிறைவடைந்ததாக தரச்சான்று கொடுக்கும் குடிநீர் வடிகால் வாரியத்தை கண்டித்தும், நாம் தமிழர் கட்சி வடக்கு மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து, நகராட்சி பொறியாளர் அறையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பொறியாளர் கோவிந்தராஜன் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து அவர், 30ஆவது வார்டு பகுதிக்கு நேரில் வந்து பார்வையிட்டார். அப்போது 30ஆவது வார்டு பகுதியில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் முழுமையாக முடிவடைந்த பின்னர் சாலை அமைக்கப்படும் என உறுதி அளித்தார். அதன் பின்னர் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்துச் சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details