மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை, தொழிலாளர் விரோதப் போக்கு, பொதுத்துறை தனியார் மயமாக்குதல் உள்ளிட்டவற்றைக் கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி, சிஐடியு உள்பட அனைத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ரசல் என்பவர் பேசுகையில், “மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்கும் முயற்சியைக் கைவிட வேண்டும்.